முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லேத் பட்டறையில் ரூ.2 லட்சம் பொருள்கள் திருட்டு

கும்மிடிப்பூண்டி,மே.1: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலை பகுதியில் திங்களன்று அதிகாலை இரும்பு லேத் பட்டறையை உடைத்து உள்ளே சென்ற 3 பேர் அடங்கிய கும்பல் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி செ

தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லேத் பட்டறையில் ரூ.2 லட்சம் பொருள்கள் திருட்டு

கும்மிடிப்பூண்டி,மே.1: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலை பகுதியில் திங்களன்று அதிகாலை இரும்பு லேத் பட்டறையை உடைத்து உள்ளே சென்ற 3 பேர் அடங்கிய கும்பல் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி செ

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:
கும்மிடிப்பூண்டி,மே.1: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலை பகுதியில் திங்களன்று அதிகாலை இரும்பு லேத் பட்டறையை உடைத்து உள்ளே சென்ற 3 பேர் அடங்கிய கும்பல் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(30). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(33). நண்பர்களான இருவரும் சேர்ந்து தச்சூர் கூட்டு சாலையில் இரும்பு லேத் பட்டறையை வைத்து நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திங்களன்று அதிகாலை 3 பேர் அடங்கிய கும்பல் லேத் பட்டறையின் கதவை உடைத்து லேத் மிஷின் உட்பட பொருட்களை கடைக்கு வெளியே எடுத்து வந்து ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரி அதிபர் ரமேஷ்(40) என்பவர் லேத் பட்டறையில் இருந்து பொருட்களை வெளியே கொண்டு வந்து கொண்டிருந்த நபர்களிடம் யார் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேட்டபோது கடை முதலாளிதான் இவற்றை கொண்டு வரச் சொன்னார் என்றிருக்கிறார்கள். அதற்கு ரமேஷ், கடை முதலாளி முனுசாமியின் அண்ணன்தான் நான். யார் நீங்கள் என சத்தம் போட்டு இருக்கிறார்.
உடனே சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் கையில் வைத்து இருந்த இரும்பு ராடை வைத்து ரமேஷை தாக்கி லேத் பட்டறையில் திருடிய பொருட்களை லாரியில் வைத்து எடுத்துச் சென்று ஓடி விட்டனர்.
முகத்தில் பலத்த காயமடைந்த ரமேஷ் இது குறித்து அவரது தம்பி முனுசாமியிடம் தெரிவிக்க அவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து லேத் பட்டறையில் திருடிய கும்பலைத் தேடி வருகின்றனர். மர்ம கும்பல் தாக்கி காயமடைந்த ரமேஷ் பொன்னேரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முழு கட்டுரையைப் படிக்க →