முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்கத் தடை

காரைக்கால், மே 5: திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்க  விதித்திருக்கும் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாக  அலுவலர் தெரிவித்தார். ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் நிர்வாக அலுவலர் எ

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

காரைக்கால், மே 5: திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்க  விதித்திருக்கும் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாக  அலுவலர் தெரிவித்தார்.

ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை இதுகுறித்து கூறியது:

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலுக்குள் பாதுகாப்பு அம்சம் கருதி போட்டோ, விடியோ எடுக்கத் தடை அமலில் உள்ளது. ஆனால், இதை   தீவிரப்படுத்தாததால் பத்திரிகையாளர்கள், விடியோ கேமராமேன்கள், பக்தர்கள் விதியை மீறி இதுவரை செயல்பட்டு வந்தனர்.

இனிமேல், நிர்வாக அலுவலரிடம் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படம் எடுத்துக் கொள்ளலாம். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை  நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது, இதில் விலக்கு அளிக்கப்படுகிறது  என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →