திருநள்ளாறு நளன் குளத்தில் குளித்த பொள்ளாச்சி பக்தர் சாவு
காரைக்கால், மே 19 : திருநள்ளாறு நளன் குளத்தில் குளித்த பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது : பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சியப்
காரைக்கால், மே 19 : திருநள்ளாறு நளன் குளத்தில் குளித்த பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது : பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சியப்பதேவர் மகன் கருப்பசாமி (45). இவர் உள்பட அந்த பகுதியை சேர்ந்த சுமார் 50 பேர் ஒரு பேருந்தில் 17-ம் தேதி புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு திருநள்ளாறு வந்தனர்.
அங்கு தங்கிய இவர்கள் சனிக்கிழமை ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க செல்லும் முன் நளன் குளத்தில் இறங்கி நீராடினர். குளத்தில் இறங்கியவர்கள் அனைவரும் கரையேறிவிட்ட நிலையில், கருப்பசாமி மட்டும் கரையேறாதது தெரிந்து மற்றவர்கள் அவரை தேடினர். போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கருப்பசாமி உடல் குளக்கரையில் ஒதுங்கியது. இவருக்கு இதய நோய் இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.