கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தாக்கியவர் கைது
விருதுநகர், மே 30 : விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, கிளம்பிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது விழுந்
விருதுநகர், மே 30 : விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, கிளம்பிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது விழுந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தாக்கியதும், அங்கிருந்த திமுகவினர் அவரை தாக்கினர். அங்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் விருதுநகரை அடுத்த பாலைவனத்தான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி என்றும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்தது. இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.