சிதம்பரத்தில் மர்மஆசாமிகள் வீடுபுகுந்து தாக்கி 22 பவுன் நகை கொள்ளை
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மர்மஆசாமிகள் வீடுபுகுந்து ஒருவரை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளையடித்து தலைமறைவாயினர்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மர்மஆசாமிகள் வீடுபுகுந்து ஒருவரை தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளையடித்து தலைமறைவாயினர்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஆட்டாநகரில் வசிப்பவர் கணபதி சுப்பிரமணியன் (45). இவர் சிதம்பரத்தில் ஆடிட்டர் அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிகிறார். வியாழக்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்க சிதம்பரத்திற்கு சென்றனர். அப்போது வீட்டில் கணபதி சுப்பிரமணியன் மட்டும் தனியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்மஆசாமிகள் வீட்டிற்குள் நுழைந்து கணபதிசுப்பிரமணியனை தாக்கி, வீட்டிலிருந்து 22 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். தலையில் காயமுற்ற கணபதி சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.