முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் அமைச்சர் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தபடி, எம்எல்ஏக்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர்களின் வாயிலாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.பி. சம்பத் (அதிமுக) குறிஞ்சிப்பாடி, சொரத்தூர் எம்எல்ஏ ரா. ராஜேந்திரன்(அதிமுக), நெய்வேலி எம்எல்ஏ எம்.பி.எஸ். சிவசுப்ரமணியன் (அதிமுக), புவனகிரி எம்எல்ஏ செல்வி ராமஜெயம் (அதிமுக),  சிதம்பரம் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் (சிபிஎம்) ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 தேமுதிக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →