முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு ரூ.37 ஆயிரம் கொள்ளை

சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வெவ்வேறு சம்பவங்களில் 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு மர்ம ஆசாமிகள் ரூ.37 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:

சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு சம்பவங்களில் 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு மர்ம ஆசாமிகள் ரூ.37 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

சிதம்பரத்தை சேர்ந்த வழக்குரைஞர் மைதிலி சீனுவாசன் மேலவீதியில் உள்ள தனியார் அங்காடியில் பொருள்கள் வாங்க காரில் வந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் கீழே 10 ரூபாய் கிடப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கீழே குணிந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் இருந்த ஹேண்ட் பேக்கினை எடுத்துக் கொண்டு தலைமறைவானார். அந்த பையில் ரூ.32 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பேன் கார்டு, வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

அதே போன்று சிதம்பரம் அயன்வெள்ளாளத்தெருவைச் சேர்ந்த ருத்ராபதி (58). இவர் குடும்பத்தினருடன் காரில் தீபாவளி பண்டிக்கைக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது வடக்குரதவீதியில் கேஸ் ஏஜென்சி எதிரில் நின்று கொண்டிருந்த போது மர்ம ஆசாமி ஒருவன் 10 ரூபாய் நோட்டு கீழே கிடப்பதாக தெரிவித்துள்ளார். கீழே குணிந்த பார்த்தபோது கையில் இருந்த பையை மர்ம ஆசாமி பறித்துக் கொண்டு தலைமறைவானார். அப்பையில் ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் இருந்தது. இது குறித்து புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.