கடலூரில் அதிகாரிகள் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து
கடலூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் முன்னணி கம்பெனியின் அதிகாரிகள் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் முன்னணி கம்பெனியின் அதிகாரிகள் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் - பரங்கிப்பேட்டை அருகே தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிடட் என்ற நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடம் எதிரில் தங்கியிருந்தனர். இந்த கம்பெனியின் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயக்குமார் தங்கியிருந்த அறையில் ஏசி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும், விஜயகுமார் வெளியில் ஓடி வந்ததால் காயம் ஏதும் ஏற்படாமல் உயிர் தப்பினார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடலூர் கடற்கரை சாலையில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.