மளிகைக் கடையில் தீ: ரூ.60 லட்சம் மதிப்பில் பொருள்கள் நாசம்
பொள்ளாச்சியில் தேர்முட்டித் திடல் பகுதியில் உள்ள 3 மாடி கொண்ட அடுக்குமாடி மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின
பொள்ளாச்சியில் தேர்முட்டித் திடல் பகுதியில் உள்ள 3 மாடி கொண்ட அடுக்குமாடி மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.