ஸ்ரீவில்லிபுத்தூரில் மேலும் 3 பஸ்கள் உடைப்பு: தொடர்ந்து பதற்றம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்ந்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பதற்றம் நீடிக்கிறது. போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மேலும் 3 பஸ்கள் உடைப்பு: தொடர்ந்து பதற்றம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்ந்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பதற்றம் நீடிக்கிறது. போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்ந்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பதற்றம் நீடிக்கிறது. போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரமகுடி, தேவர் குருபூஜைக்கு சென்றவர்கள் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தேவர் கூட்டமைப்பினர் புதன்கிழமை பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இது முழு அளவில் இப் பகுதியில் நடைபெற்றது.
இதற்கிடையே புதன்கிழமை இரவு செங்கோட்டை பணிமனையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஞ்சவர்ணம் மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த அந்த பேருந்தை ஒருவர் வழிமறித்து நிறுத்தியுள்ளார். ஓட்டுநர் அ.பால்ச்சாமி (40) பேருந்தின் வேகத்தை குறைத்தவுடன் வழிமறித்த நபர் கற்களை வீசியுள்ளார். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசியில் உள்ள ஸ்ரீபோத்தீஸ் ஸ்பார்க்லர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ், துரைச்சாமியாபுரத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்களை நாச்சியார்பட்டி, வங்கார்பட்டி பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு இரவு வந்து கொண்டிருந்துள்ளது. வங்கார்பட்டி ஊரணிக்கரையில் இருந்த ஒரு கும்பல் டிரைவர் மாரனேரி, அம்மாபட்டியைச் சேர்ந்த சேமராஜ் மகன் பெருமாள்சாமி (34) என்பவரை இறக்கிவிட்டுள்ளது. நாங்கள் பந்த் அறிவித்தும் எப்படி வண்டியை ஓட்டலாம் என்று கூறி கற்கள் மற்றும் கம்பால் பஸ்ஸை முழுவதும் அடித்து நொறுக்கியுள்ளது. இது குறித்து டிரைவர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே.புதுப்பட்டியில் உள்ள சரவணா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு இரவு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு பஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் இடையே சென்று கொண்டிருந்துள்ளது. காந்திநகர் அருகே ஒரு கும்பல் பஸ்ஸை கல்வீசி தாக்கியுள்ளது. இதில் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்துள்ளது.
வன்முறை செய்ய வேண்டும் என பேசியவர் கைது: கிருஷ்ணன்கோவில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிருஷ்ணன்கோவில்-வலையபட்டி சந்திப்பில் பேரையூர், அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் அழகுராஜா (22) என்பவர், பரமகுடி சம்பவம் தொடர்பாக இப் பகுதியில் வரும் பஸ்களை சேதப்படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தாராம். இவரை போலீஸார் முன் எச்சரிக்கையாக கைது செய்தனர்.
இச் சம்பவங்களின் தொடர்ச்சியாக ஒருவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அச்சம்தவிழ்த்தான், கீழத்தெருவைச் சேர்ந்த பழனி மகன் ராஜ்குமார் (32). இவர் ராஜபாளையத்தில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். புதன்கிழமை இரவு வேலை முடிந்து வந்துள்ளார். அப்போது அச்சம்தவிழ்த்தான், அக்ராஹரம் தெருவைச் சேர்ந்த கு.பால்பாண்டி, மு.ஈஸ்வரன், ந.கருப்பையா ஆகியோர் வழிமறித்து, ஆபாசமாகப் பேசி, ராஜ்குமாரை கல்வீசி தாக்கினார்களாம். இதில் இவர் காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையை செவ்வாய்கிழமை இரவு இரு அரசு பஸ்களை உடைத்த வழக்கில் திருவண்ணாமலையைச் சேர்ந்த காளி, கோவிந்தராஜ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி, பாலமுருகன் மற்றும் பலர் மிது வழக்குப் பதிவு செய்து இவர்களை தேடி வருகிறார்கள்.