கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது
பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து நிலையம் எதிரே அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (38) இவரது மனைவி கற்பகம் (34). இவர்கள் ரயில்வே நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலிஸாருக்கு தகவல் வந்தது. இதையொட்டி பண்ருட்டி காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) குருமூர்த்தி தலைமையிலான குழுவினர் பண்ருட்டி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிவாவையும், அவரது மனைவி கற்பகத்தையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.