பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது
சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் சனிக்கிழமை
சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவரது மகள் சுந்தரவள்ளி(13). இவர் மருதூரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜாமணி(30) பாலியல் பலாத்காரம் செய்தததால் தற்போது அம்மாணவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாணவி சுந்தரவள்ளி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வாலிபர் ராஜாமணியை கைது செய்தார்.