முகப்பு
தற்போதைய செய்திகள்

பைக் சைலன்ஸர் மீது பட்டாசு பட்டு வெடித்தது: 3 பேர் காயம்

நாகப்பட்டினம் அருகே இரு சக்கர வாகனத்தில் பட்டாசுகளை வாங்கி பெட்டியில் கட்டி வைத்து எடுத்துச் சென்றபோது, வண்டியின் சைலன்ஸரில் பட்டு, வெப்பத்தால் பட்டாசுகள் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

நாகப்பட்டினம் அருகே இரு சக்கர வாகனத்தில் பட்டாசுகளை வாங்கி பெட்டியில் கட்டி வைத்து எடுத்துச் சென்றபோது, வண்டியின் சைலன்ஸரில் பட்டு, வெப்பத்தால் பட்டாசுகள் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைக்கால் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் எடுத்துச் சென்றனர். அவர்கள் தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் வந்தபோதுபோது, பக்கவாட்டில் மாட்டி வைத்திருந்த பட்டாசு பெட்டிகள், வண்டியின் புகை போக்கும் சைலன்ஸரில் பட்டது. அதனால் வெப்பமடைந்து, பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்தன. இந்த வெடிவிபத்தில் பைக்கில் சென்ற 3 பேர் காயம் அடைந்தனர். இதில் வண்டியும் லேசாக எரிந்தது.

இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பொதுமக்கள், வண்டி சைலன்ஸரில் படும்படியாக பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று போவோர் வருவோரிடம் கூறிக் கொண்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →