முகப்பு
தற்போதைய செய்திகள்

எம்.ஐ.எம்.முடன் சமரசம் பேச ஆந்திரம் வருகிறார் குலாம்நபி ஆசாத்!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் 14 ஆண்டுகள் ஆதரவாக இருந்த எம்ஐஎம் கட்சி, காங்கிரஸுடன் உண்டான தனது உறவைத் துண்டித்துக் கொண்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் 14 ஆண்டுகள் ஆதரவாக இருந்த எம்ஐஎம் கட்சி, காங்கிரஸுடன் உண்டான தனது உறவைத் துண்டித்துக் கொண்டது.

சார்மினார் அருகில் உள்ள பாக்யலட்சுமி கோயிலில் மராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறி அதைத் தடுக்கப் புறப்பட்ட எம்ஐஎம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். மறுநாள் கூடிய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் அது பற்றி விவாதித்த பிறகு ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் அதுதுதீன் குவேஸி அறிவித்தார்.

திங்கள்கிழமை காலையில் இருந்து புதன்கிழமை வரை ஐஎம்ஐயுடனான உறவை சீராக்க காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. மாநில காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் பற்றி முதல்வர் கிரண் குமார் ரெட்டி கட்சி மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் புதன்கிழமை கட்சி மேலிடத் தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், வயலார் ரவி ஆகியோர் இப்பிரச்னை பற்றி தில்லியில் ஆலோசனை நடத்தினர். கிரண்குமார் ரெட்டி பிரச்னையை அரசியஸ் ரீசியில் கையாளவில்லை என குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில் குவேஸியை சமாதானப்படுத்தி துண்டித்த உறமை மீண்டும் ஒட்டவைக்க இவ்வார இறுதியில் குலாம்நபி ஆசாத் ஐதராபாத் வருவார் எனத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →