முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரசவ காலத்தில் பெண் சாவு - கோட்டாட்சியர் விசாரணை

பிரசவ காலத்தில் துன்பப்பட்ட பெண் இறந்து போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருமணமான ஒன்றரை..

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

பிரசவ காலத்தில் துன்பப்பட்ட பெண் இறந்து போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பெண் இறந்து போனதைத் தொடர்ந்து பழனி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கூம்பூர் காவல் சரகம், உசிலம்பட்டி அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சிவசுந்தரின் மனைவி ராமாயி(23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்க்கப்பட்டார். பிரசவத்தில் சிக்கல் இருப்பதைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்து போனாராம். இது குறித்து கூம்பூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்யப்பட்டது. திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் ராமாயி இறந்து போனதைத் தொடர்ந்து பழனி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments