முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மேலும் இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் புதன்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் புதன்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் வலி இதனுடன் சேர்த்த மர்ம காய்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
புதன்கிழமை மாலை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த முனீஸ்குமார் (25) மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி-திருமலாபுரம் தெருவைச் சேர்ந்த பேச்சியம்மாள் (4) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். 
இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →