ஹாங்காங் ஓபன்: 2ஆவது சுற்றில் சாய்னா
ஹாங்காங்கில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அப்ரில்லாவை நேர் செட்களில் வீழ்த்தினார் சாய்னா. இந்த ஆட்டத்தில் முதல் செட்டைக் கைப்பற்ற
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சாய்னா நெவால்.
ஹாங்காங்கில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அப்ரில்லாவை நேர் செட்களில் வீழ்த்தினார் சாய்னா. இந்த ஆட்டத்தில் முதல் செட்டைக் கைப்பற்ற இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 22-20 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார் சாய்னா. 2ஆவது செட்டை 21-8 என்ற கணக்கில் எளிதாக வென்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா.
அதேபோல் ஆடவர் பிரிவில் காஷ்யப், டென்மார்க்கின் ஜான் ஜார்சென்ஸனை 24-22, 20-22, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராமும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இவர் சீனாவின் ùஸன்மிங் வாங்கை 22-20, 23-21 என்ற நேர் செட்களில் போராடி வென்றார்.
இரட்டையர் பிரிவில் பிரணாவ் சோப்ரா மற்றும் சிகி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி அமெரிக்காவின் பிலிப் ஷீவ், ஜெமிய் ஷுபன்தி ஜோடியை 21-18, 21-23 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் தருண், அஸ்வின் பொன்னப்பா 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஷென் ஸý மற்றும் ஜின் ஜோடியிடம் தோல்வியுற்றது.