தற்போதைய செய்திகள்

புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்

புதியதாக சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடங்களை காணொலி காட்சி ( Video Conferencing ) மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தினமணி

புதியதாக சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடங்களை காணொலி காட்சி ( Video Conferencing ) மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மதுரை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஈரோடு - அவல்பூந்துறை, திருப்பூர் - வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், என மொத்தம் ரூ.5 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடங்களை காணொலி காட்சி ( Video Conferencing ) மூலம் திறந்து வைத்தார்.

மதுரை, இராசகம்பீரம் கிராமம், ஒத்தக்கடையில், ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில், மதுரை பதிவுத் துறை துணைத் தலைவர் அலுவலகம், பதிவுத்துறை உதவித் தலைவர் (சரகம்) அலுவலகம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) - மதுரை (வடக்கு), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) - மதுரை (வடக்கு), இணை-ஐ சார் பதிவாளர் அலுவலகம் மதுரை (வடக்கு), சார் பதிவாளர் அலுவலகங்கள் - தல்லாகுளம், சொக்கிகுளம், தெப்பகுளம், தாமரைப்பட்டி ஆகிய 9 அலுவலகங்களை உள்ளடக்கி புதியதாக கட்டப்பட்டுள்ள மதுரை ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்; வேலூர், ஆரணி சாலையில், ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில், பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) மற்றும் இணை-ஐ சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களை உள்ளடக்கி புதியதாக கட்டப்பட்டுள்ள வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்;

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்பூலியூரில், 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) மற்றும் இணை-ஐ சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களை உள்ளடக்கி புதியதாக கட்டப்பட்டுள்ள கடலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்; ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை மற்றும் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் தலா 28 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள், என மொத்தம் ரூ.5 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடங்களை  முதலமைச்சர்  இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய அலுவலகக் கட்டடங்களில், அலுவலர்களுக்கான அறைகளுடன் கணினி அறை, மாநாட்டுக் கூடம், பதிவுறுக்கள் பாதுகாப்பு அறை, பொதுமக்கள் வசதிக்காக காத்திருப்போருக்கான அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய்தள மேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறை உயர் அலுவலர்களின்  பயன்பாட்டிற்காக ரூ.1 கோடியே 22 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 23 பொலிரோ வாகனங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர், பதிவுத்துறைத் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT