தற்போதைய செய்திகள்

மதுரை அரசு பொது மருத்துவமனையில் யாகம்

மதுரையில் டெங்கு காய்ச்சலால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுவதை அடுத்து, அரசு பொது மருத்துவமனையில் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் இந்த

ஜெயப்பாண்டி

மதுரையில் டெங்கு காய்ச்சலால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுவதை அடுத்து, அரசு பொது மருத்துவமனையில் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் மதுரை மருத்துவமனையில் 44 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பல பீதியுடன் காலம் கழிக்கின்றனர். அவர்களின் மனச் சாந்திக்காகவும், அச்சத்தைப் போக்கவும் சில நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுப் புறத் தூய்மை, உடனடி மருத்துவ வசதிகள் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டும், உளவியல் ரீதியாக நோயாளிகளைத் தேற்றும் பொருட்டு இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT