முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை ஒருநாள் பயிற்சி வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் உள்ள 8 குறுவளமையங்களில் நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை ஒருநாள் பயிற்சி வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் உள்ள 8 குறுவளமையங்களில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் என்றால் என்ன; சூழியல் சீர்கேட்டை தடுப்பதற்கான 13 சட்டங்கள்; புவி வெப்பமயமாதல் மற்றும் அதை தடுக்கும் முறை; நிலம், நீர், காற்று, ஒலி உள்ளிட்ட பல்வேறு வகை மாசுபடுதல்; சுற்றுச்சூழல் பயன்பாட்டில் மாணவர் பங்கு; பள்ளிகளில் எக்கோ கிளப் தோற்றுவித்தலின் அவசியம்; கதிரியக்க மாசுபடுதல்; அமில மழை; சமுத்திரத்தின் சீர்கேடு; சுற்றுப்புற சூழ்நிலை மாசு அடையாமல் பாதுகாக்க எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது; சுற்றுச்சூழல் மாசு அடைவதால் ஏற்படும் விளைவுகள்; இனிமேல் நாம் செய்ய வேண்டிய கடமைகள்; சுற்றுச்சூழலை காக்க ஏற்படுத்துப்பட்டுள்ள தினங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்ற பயிற்சியில் 105 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தம்பிபட்டி, மகாராஜபுரம், கூமாப்பட்டி, மேலகோபாலபுரம், துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 6 குறுவளமையங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் 211 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்களும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →