முகப்பு
தற்போதைய செய்திகள்

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு: பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சம் 150 மி.மீ மழை

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்புபகுதியில் பெய்த பலத்த மழையினால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு
பகுதியில் பெய்த பலத்த மழையினால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 10.17 அடியும், கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 3
அடியும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் அதிகபட்சம் 150 மி.மீ மழை பெய்துள்ளது.

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை இல்லை. இப்பருவமும் பொய்த்து விடுமோ என அச்சம்
விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின்
நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை: பாபநாசம் அணையில் அதிகபட்சம் 150 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 113 மி.மீ, சேர்வலாறு அணையில் 110 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 139.2 மி.மீ, கடனாநதி அணையில் 34 மி.மீ, ராமநதி அணையில் 10 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 25.3 மி.மீ  சேரன்மகாதேவியில் 39 மி.மீ. நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையினால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக
அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2237.37 கனஅடியும்,மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 496 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 280 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 145.69 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

சேர்வலாறு அணை 10 அடி உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 10.17 அடி உயர்ந்து 85.46 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 0.80 அடி உயர்ந்து 63.70 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 70.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 70.00
அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து 600 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 30 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 45 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைகளில்
இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →