ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு.
மூத்த மகள் சந்தனமாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த புதன்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து இரண்டாவது மகள் மகேஸ்வரி மீனாட்சிபுத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சந்தனமாரியை உள் நோயாளியாகவும், படுக்கை இல்லாத காரணத்தால் மகேஸ்வரியை புற நோயாளியாகவும் இருந்து சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை மாலை உடல் நிலை சரியாகிவிட்டது என்று கூறி டாக்டர்கள் மருத்துவமனையில் இருந்து மாலை அனுப்பி வைத்துள்ளனர்.
இரவு வீட்டிற்கு வந்த மகேஸ்வரி உயிரிழந்தார். ஒரு மகள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்ததையடுத்து, சந்தனமாரியை மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
இது குறித்து அறிந்து, மீனாட்சிபுரம் கிராமத்திற்கு சென்றோம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் கணேஷை சந்தித்து மாணவியின் உயிரிழப்பு குறித்து கேட்டோம்.
அவர் கூறியதாவது: டி.மானகசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்து பள்ளி குழந்தைகளை பரிசோதித்து தக்க மருந்துகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும். முன்பெல்லாம் மருத்துவக் குழுவினர் வந்து அடிக்கடி சிகிச்சை அளித்துச் செல்வார்கள். தற்போது இந்த நடைமுறையில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செவிலியர் ஒருவர் வந்து, ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் சிகிச்சை அளித்ததாக கூறிச் செல்கிறார்கள். தற்போது பள்ளியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாம் வகுப்பு மாணவி மகாலட்சுமி, ஒன்றாம் வகுப்பு மாணவி தங்கமதி ஆகியோர் பள்ளி வரவில்லை. தங்கமதியின் சகோதரி முத்துஇசக்கி ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பொது சுகாதாரத் துறையினர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் நோய் வந்தால் கூட வந்து கிராமத்தில் தடுப்புப் பணியை பார்ப்பது கிடையாது என்றார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் காளிராஜை நாம் நேரில் அணுகி கேட்ட போது, அவர் கூறியதாவது:
டெங்கு என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல இயலாது என்று கூறிவிட்டார்.
உயிரிழந்த மகேஸ்வரியின் தந்தை கருப்பையாவிடம் கேட்ட போது,
மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லை என்று காரணம் கூறி எங்களை கவனிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். மருத்துவமனையில் மனித நேயம் இல்லாமல் நடத்துகிறார்கள். உடல்நிலை மோசமான குழந்தையைக் கூட உள் நோயாளியாக சேர்க்க மறுத்துவிட்டார்கள் என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த வாரம் யு.கே.ஜி. சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் நோய் தடுப்புப் பணிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும்.