பால்தாக்கரே அஸ்தி கொண்டு செல்ல அனுமதி மறுப்பு: குமரி மாவட்டத்தில் பதற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே அஸ்தியைக் கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே அஸ்தியைக் கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த பால் தக்கரேவின் அஸ்தியை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கரைப்பதற்காக சிவசேனைக் கட்சியினர் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வாகனங்களில் வந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள், தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டது. களியக்காவிளை சோதனைச் சாவடியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய தமிழக போலீஸார், அவர்கள் வந்த வாகனங்களை தமிழகத்துள் உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால் அனைத்து வாகனங்களும் தடுக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்த சிவசேனைக் கட்சியினர், போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிராக கோஷம் இட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.