ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, கடந்த 15 நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, கடந்த 15 நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, கடந்த 15 நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள மம்சாபுரம், குன்னூர், ஆர்.ரெட்டியபட்டி, டி.மானகசேரி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் சரிவர செயல்படாததே இந் நோய் வேகமாக பரவி வருவதற்கு காரணம் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வைத்தியலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு இரண்டாவது பெண் குழந்தை லியோ பிரபா பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்கள். இரு நாட்கள் காய்ச்சல் இருந்து சுகமாகியுள்ளது. மீண்டும் இரு நாட்கள் கழித்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காட்டியுள்ளார்கள். பின்னர் இங்குள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் காட்டியுள்ளார்கள். அங்கு டாக்டர் இது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி. எனவே மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதன்படி மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தை லியோ பிரபாவை இரு நாட்களுக்கு முன்னர் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு டாக்டர்கள் குழந்தை உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதமே உறுதி கூறமுடியும் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்கள். சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்குள் இக் காய்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளது இப் பகுதி மக்கள் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாடு- பொது மக்கள் புகார்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மம்சாபுரம், குன்னூர், டி.மானகசேரி, ஆர்.ரெட்டியபட்டி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆனால் இங்கு மருத்துவர்கள் இருந்து தீவிர சிகிச்சை அளிப்பது இல்லை. நோயாளிகளை அலைக்கழிக்கிறார்கள். மேலும் இங்குள்ள மருத்துவர்கள் நடத்தும் தனியார் கிளினிக்களுக்கு வரச்சொல்லி சிகிச்சை அளிக்கிறார்கள். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சுற்றியுள்ள பல தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு தற்போது வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் மருத்துவக் குழுவினர் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகள் சரிவர பரிசோதித்து சிகிச்சை அளிப்பதில்லை என்றும், அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு சிகிச்சைக்குச் சென்றால், செவிலியர்களைக் கொண்டு மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவைப்பதாயும் பொது மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் நிலவும் கடுமையான சுகாதார சீர்கேட்டைப் போக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறையாக செயல்படவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் விரும்புகிறார்கள். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.