மதுரையில் துப்பாக்கியுடன் பிடிபட்ட ஒருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை பெருங்குடி பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் பிடிபட்டார். பெருங்குடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே பிடிபட்ட அவரிடம் போலீஸார் சோதனை செய்ததில் அவரிடம் ஏர் கன் ஒன்றும், வேல்கம்பு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது. அவரை விசாரித்த போலீஸார் அவர் பெயர் துரைப்பாண்டி (45) என்றும், மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.