முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசம் வெற்றி
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்ட வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்ட வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த வங்கதேச அணி 40.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வங்கதேசத்தின் குல்னாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்யத் தொடங்கியது. சிம்மன், கெய்ல் ஆகியோர் இன்னிங்ûஸத் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 48ஆக உயர்ந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 13 ரன்களில் கெய்ல் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் அதிகபட்சமாக பிராவே 35, நரேன் 36 ரன்கள், ராம்பால் 25 ரன்கள் எடுத்தனர். மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 47 ஓவரில் 199 ரன்களுக்கு அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
வங்கதேசத் தரப்பில் ஷோகக் காஸி 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன்களுடன் 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்துல் ரசாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து பேட் செய்யத் தொடங்கிய வங்கதேச அணி எவ்விதத் தடுமாற்றமுமின்றி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். அணியின் ஸ்கோர் 88 ஆக உயர்ந்தபோது 58 ரன்கள் எடுத்திருந்த தமிம் இக்பால் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார்.