முகப்பு
தற்போதைய செய்திகள்

மயில் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம்

திருப்பரங்குன்றம் அருகே மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றம் என்ற பகுதியில் மயில்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மயில்கள் வெளியே வருவதும் பிறகு மீண்டும் தங்கள் பகுதிக்குச் செல்வதும் வாடிக்கை.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:05 PM
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றம் என்ற பகுதியில் மயில்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மயில்கள் வெளியே வருவதும் பிறகு மீண்டும் தங்கள் பகுதிக்குச் செல்வதும் வாடிக்கை.

இன்று அதிகாலை, திருப்பரங்குன்றம் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து திடீரெனப் பறந்து வந்த மயில், மேலிருந்து அந்த நபரின் தலைக்கு மேலே விழுந்தது. இதில், பலத்த அடிபட்டு மயில் உயிரிழந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மயில் தாக்கி ஒருவர் பலத்த காயமடைந்த செய்தி, திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.