கடலூரில் கடல் சீற்றம் : விசைப்படகுகள் கரை திரும்பின
கடலூரில் இன்று கடல்சீற்றம் அதிகமாக இருந்ததால் 250க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் கரை திரும்பினர்.
கடலூரில் இன்று கடல்சீற்றம் அதிகமாக இருந்ததால் 250க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் கரை திரும்பினர்.
கடலூரில் சுமார் 1000 விசைப்படகுகள் உள்ளன. அண்மையில் ஏற்பட்ட மின் தடை காரணமாக ஐஸ் உற்பத்தி பாதிப்பு மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக பாதிக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில், 300 விசைப் படகுகள் மீன்பிடிக்க இன்று அதிகாலை கடலுக்குச் சென்றன. 6 மணியளவில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், 250 விசைப் படகுகளில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிவிட்டனர். சுமார் 10 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்புவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் தெரிவித்துள்ளார்