தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரத்தில் ரயில் மறியல்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.40 மணிக்குக் கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர், நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.40 மணிக்குக் கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர், நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி கர்நாடகம் காவிரியில் நீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று முழுவதும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் இன்று காலை குபேரன் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணியினர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Advertisement