முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பாசமுத்திரத்தில் ஹெல்மெட் அணிந்து வழக்கறிஞர்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:08 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் மன்றம் ஆகியன பழைய கட்டடங்களில் இயங்கி வருகிறது. முந்தைய ஆட்சியில் இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற வளாகம் கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது நீதிமன்ற கட்டடங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன.  குரங்குகள் அட்டகாசம் செய்து நீதிமன்றத்தின் கூரை ஓடுகளை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் அவதிப்படுகின்றனர்.

வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே வெள்ளிக்கிழமை அம்பாசமுத்திரம் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் ஹெல்மெட் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைப்பின் தலைவர்  ஜோயல்ஹென்றி தலைமையில் செயலர் மீனாட்சிநாதன், பொருளாளர் சுரேஷ்குமார், வழக்குரைஞர்கள் செல்வராஜ், முத்துராமலிங்கம், வள்ளுவராஜ், ஜெகன், செந்தில்குமார், சண்முகசுந்தரம், அசோக்சுப்பிரமணியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இந்த நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து அமைப்பின் தலைவர் கூறியதாவது: கோரிக்கையை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தோம். அரசு இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் வரும் 11 ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்..

முழு கட்டுரையைப் படிக்க →