முகப்பு
தற்போதைய செய்திகள்

அருந்ததியர் ஜனநாயக முன்னணியினர் தாக்கி போலீஸார் காயம்: 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அருந்ததியர் ஜனநாயக முன்னணியினர் கல்வீசி தாக்கியதில் போலீஸார் ஒருவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அருந்ததியர் ஜனநாயக முன்னணியினர் கல்வீசி தாக்கியதில் போலீஸார் ஒருவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலையில் மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஆண்டு தோறும் அருந்ததியர் கலை விழா நடைபெறும். இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக திருத்தங்கல்லில் இருந்து ஒரு லோடு ஆட்டோவில் ஆட்கள் வந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர்கள் லோடு ஆட்டோவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை இடைய ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ராமராஜ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கலை விழாவிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த லோடு ஆட்டோவில், ஆட்களை ஏற்றி வந்துள்ளதால் லோடு வேனை போலீஸார் நிறுத்தியுள்ளார். சாதாரண சிறிய வழக்குப் போட்டு, சம்பவ இடத்திலேயே சார்பு ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார். வண்டியை ஓட்டி வந்த திருத்தங்கல், பனையடிபட்டித் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் செந்தில்குமார் (30) என்பவர் என்னிடம் பணம் இல்லை. போய் வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்றுளார். டிரைவர் வெகு நேரமாக வராததால், லோடு வேனை போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளார்.

பின்னர் சார்பு ஆய்வாளர், அதிரபடிப்படை வீரர்களுடன் திருவண்ணாமலைக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கருப்பசாமிகோயில் அருகே அருந்ததியர் ஜனநாயக முன்னணி மாநில பொதுச் செயலாளர் கௌதமன், அருந்ததிதியர் ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், டிரைவர் செந்தில்குமார், வேலு, பாண்டியராஜன் ஆகியோர் அதிரடிப்படை போலீஸார் மற்றும் சார்பு ஆய்வாளரை வழிமறித்துள்ளனர். எப்படி ஆட்களை ஏற்றிச் சென்ற லோடு வேனுக்கு பொய் வழக்கு போடலாம் என்று தரக்குறைவாக ஆபாசமாக பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் கல்வீசியதில் விருதுநகர் ஆயுதப்படை 2-ம் பிரிவு காவலர் திருமுருகன் பலத்த காயம் அடைந்தார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆயுதப்படை காவலர் திருமுருகன், நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லோடு வேன் டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர். ஏனையோரைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →