தற்போதைய செய்திகள்

முத்தூட் பைனான்ஸ் நகைக் கொள்ளை: மதுரை ரயில் நிலையத்தில் 7 கிலோ தங்கம் மீட்பு

மதுரையில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான 37 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி

ஜெயப்பாண்டி

மதுரையில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான 37 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் அறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். ஏற்கெனவே இந்தக் கொள்ளை தொடர்பாக கல்லுரி மாணவர்கள் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். ஒரு மாணவர் செல்வின் மட்டும் போலீஸில் பிடிபட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று வரை இந்தக் கொள்ளை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 17 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இன்று கைப்பற்றப்பட்ட 7 கிலோ தங்கம் சேர்த்து, 24 கிலோ தங்கத்தை போலீஸார் மீட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT