முகப்பு
தற்போதைய செய்திகள்

சவுதிஅரேபியா நாட்டில் இறந்தவர் சடலத்தை மீட்டுத்தர ஆட்சியரிடம் கோரிக்கை

சவுதிஅரேபியா நாட்டில் மர்மமான முறையில் இறந்த சிதம்பரத்தைச் சேர்ந்த வாலிபர் சடலத்தை மீட்டுத்தருமாறு அவரது தாயார் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

சவுதிஅரேபியா நாட்டில் மர்மமான முறையில் இறந்த சிதம்பரத்தைச் சேர்ந்த வாலிபர் சடலத்தை மீட்டுத்தருமாறு அவரது தாயார் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சிங்காரகுப்பம் என்ற கிராமத்தில் வசிக்கும் அம்பிம்கைதாசன் என்பவரது மகன் சுந்தர்ராஜன்(26). இவர் கடந்த செப்.25 ந்தேதி கத்தார் நாட்டிற்க்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் 4 நாட்கள் அவரை தங்க வைத்துள்ளனர். பின்னர் சவுதிஅரேபியாவுக்கு  அழைத்துச் சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்.13-ந் தேதி சுந்தர்ராஜன் தனது பெற்றோருக்கு போன் செய்து நான் மேய்த்த ஒட்டகக்குட்டி இயற்கையாகவே இறந்துவிட்டது. எனக்கு இங்கு உனவு தருவதில்லை. எப்படியாவது என்னை நம் நாட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள். இங்கு இருப்பதற்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார். இதனிடையே அக்.14 ந்தேதி அவர் வேலைசெய்த இடத்திலிருந்து சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக என்று ஃபோன் மூலம் தகவல் வந்துள்ளது. கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது மகனுடைய முகத்தையாவது பார்க்கவேண்டும். மகனின் சடலத்தை மீட்டுத்தர வேண்டும் என அவரது தாயார் விஜயலட்சுமி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் என மனு கொடுத்துள்ளார். மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ராஜேந்திரரத்னூ உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.