முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெர்மன் நாட்டவருக்கு பன்றிக் காய்ச்சல்: சேலம் மருத்துவமனையில் சிகிச்சை

சேலத்தில், ஜெர்மன் நாட்டவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

சேலத்தில், ஜெர்மன் நாட்டவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

நேற்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவ மார்ட்டின் கெனோரிச் (19) என்பவர், சேலம் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தொற்று காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவர், கலாசார சுற்றுலாவாக இந்தியாவுக்கு வந்தவர். கடந்த 13ம் தேதி சேலம் வந்தார். இவருக்கு காய்ச்சல் அதிகரித்து இருக்கவே, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தவுடன், நேற்று சேலம் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் தொற்றை உறுதிப்படுத்தினர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.