முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி பிரச்னையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் போராட வேண்டும்: திருமாவளவன்

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் எம்.பி தெரிவித்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:18 PM
பகிர்:

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் எம்.பி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலுக்கு 50 பேர் இறந்துள்ளனர். 400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் புறங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்பட என்ன காரணம் என்பதை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால் காவிரி நீர் தேவையில்லை என எண்ணக் கூடாது. காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதன் மூலம் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். ஆனால் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

தென்மாவட்டங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். மணல் எடுக்க அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை இல்லை. மாறாக மணல் திருட்டை தடுப்பவர்கள் மீது வழக்குப் போடும் நிலை உள்ளது.

மதுவிலக்கை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்த தேசிய அளவில் கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி வரும் 2013 ம்ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம்  நடத்தப்படும்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை போக்க அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். மின் பற்றாக்குறை தீரும் வரை தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது. பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் இருந்தால் மட்டும்தான் வழங்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →