முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் பேருந்து-மணல் லாரி மோதல்: 14 பயணிகள் படுகாயம்: லாரி ஓட்டுநருக்கு கால்முறிவு

ஈரோடு அருகே கரூர் பிரதான சாலையில் பஞ்சலிங்க புரம் என்ற இடத்துக்கு அருகே லாரியும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:18 PM
பகிர்:

ஈரோடு அருகே தனியார் பேருந்து-மணல் லாரி மோதிய விபத்தில் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் கால்முறிவு ஏற்பட்ட லாரி ஓட்டுநர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 ஈரோட்டில் இருந்து கரூருக்கு தனியார் பேருந்து ஒன்று சனிக்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கரூர் புறவழிச்சாலையில் கணபதிபாளையம் அருகே பஞ்சலிங்கபுரம் ஆரியங்காட்டுபாலத்தில் வந்தபோது, கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த மணல் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டன.
 இதில் பேருந்தில் இருந்த பயணிகள் 14 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் நல்லப்பனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த மொடக்குறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
 லாரி ஓட்டுநர் நல்லப்பனை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் 14 பேரையும் போலீஸார் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இந்த விபத்தில் பேருந்தும், லாரியும் முற்றிலும் நொறுங்கின. இச்சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 படுகாயம் அடைந்த பயணிகள் விவரம்:
 கே.ரமேஷ் (37), சுரேஷ் (34)(பாரதிபுரம், சூரம்பட்டி, ஈரோடு), செல்வா (32), ரமேஷ் (20) (திருவாரூர்), மகாராஜன் (31) (வள்ளியம்மை வீதி, சூரம்பட்டி), புஷ்பா (46) (மாரிமுத்து வீதி, ஈரோடு),  பெருமாள் (57) (கணபதிபாளையம்), செந்தில் (32) (மணல்மேடு), முருகேசன் (42) (சத்திரப்பட்டி, கொளாநல்லி, ஈரோடு மாவட்டம்), ஜான்ராஜ் (66) (குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்), காந்திமதி (54) (ராஜீவ்நகர், ஆர்.என்.புதூர், ஈரோடு மாவட்டம்), செந்தில்குமார் (29) (பங்களாதெரு, குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்), மாரியாயி (40) (சத்திரப்பட்டி, கொளாநல்லி, ஈரோடு மாவட்டம்) (முருகேசனும், மாரியாயியும் தம்பதியினர்). 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.