முகப்பு
தற்போதைய செய்திகள்

வீராணத்திலிருந்து சென்னை குடிநீருக்கு அனுப்பும் நீர் 76 கனஅடியாக உயர்வு

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்கு நீர் அனுப்புவது சனிக்கிழமை முதல் விநாடிக்கு 76 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்கு நீர் அனுப்புவது சனிக்கிழமை முதல் விநாடிக்கு 76 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியிலிருந்து கடந்த அக்.24-ம் தேதிதியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 38 கனஅடி அனுப்பப்பட்டது. அதன் பின்னர் விநாடிக்கு 68 கனஅடி நீர் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை முதல் விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.
 
வீராணம்ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 ஆகும். தொடர்மழையின் காரணமாக ஏரியிள் பாதுகாப்பு, வெள்ளப் பாதுகாப்பை கருதி ஏரியில் 45 அடி நீர் மட்டம் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் ஏரியிலிருந்து உபரிநீரை சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் அணைக்கட்டு வழியாக வெள்ளாற்றில் விநாடிக்கு 950 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.