ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு : பல்வேறு கட்சியினர் சந்திப்பு, ஆர்ப்பாட்டம்
சேலம், செப்., 17 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதை எதிர்த்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா தீக்குளித்தார். பலத்த காயமடைந்து சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயராஜாவை
தற்போதைய செய்திகள்ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு : பல்வேறு கட்சியினர் சந்திப்பு, ஆர்ப்பாட்டம்
சேலம், செப்., 17 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதை எதிர்த்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா தீக்குளித்தார். பலத்த காயமடைந்து சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயராஜாவை
சேலம், செப்., 17 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதை எதிர்த்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா தீக்குளித்தார். பலத்த காயமடைந்து சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயராஜாவை பல்வேறு கட்சியினரும் நேரில் சந்தித்து வருகின்றனர்.
தீக்குளித்த விஜயராஜாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவர் சேலம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தீக்குளிப்புக்கான வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், மதிமுக, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் விஜயராஜாவை இன்று நேரில் வந்து பார்த்தனர்.