முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆண்டாள் சூடிய மாலைகள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.20: ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் திருப்பதிப் பெருமானுக்கு சூட்டுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி பிரம்மோற்ஸவ நிகழ்ச்சியின் 5ம் நாள்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.20: ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் திருப்பதிப் பெருமானுக்கு சூட்டுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி பிரம்மோற்ஸவ நிகழ்ச்சியின் 5ம் நாள் அன்று இந்த மாலை பெருமாளுக்கு சூட்டப்படும்.
கிளி, பரிவட்டம், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை ஆகியவற்றை அனுப்பி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அலுவலர் சாரா உறுப்பினர் பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இவை திருவீதி உலாவாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் காரில் கோயில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், கிச்சன் என்ற கிருஷ்ணன் ஆகியோர் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முழு கட்டுரையைப் படிக்க →