கூட்டுறவு வங்கி சபைக் கூட்டம் : திமுக-அதிமுக இடையே மோதல்
பொள்ளாச்சி, செப்., 20 : பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கிக்கான மகா சபை கூட்டம் இன்று பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அனைத்துக் கட்சியினரும், பொதுமக்கலும் கலந்து கொண்டனர். கூ
பொள்ளாச்சி, செப்., 20 : பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கிக்கான மகா சபை கூட்டம் இன்று பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அனைத்துக் கட்சியினரும், பொதுமக்கலும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், விண்ணப்பங்கள் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் திமுகவினர் புகார் எழுப்பினர். இதனால் திமுக - அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து பொள்ளாச்சியில் மார்க்கெட் சாலையில் திமுக நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரை போலிஸார் கைது செய்தனர்.