முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் அருகே சுடுகாட்டில் பெண் படுகொலை

சேலம், செப்.23: சேலம் மாவட்டம் வலசையூர் அருகே மனநலம் குன்றிய பெண் சுடுகாட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வீராணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  சேலம் வலசையூர் அருகேயுள்ள பூவனூரைச் சேர்ந்

தற்போதைய செய்திகள்

சேலம் அருகே சுடுகாட்டில் பெண் படுகொலை

சேலம், செப்.23: சேலம் மாவட்டம் வலசையூர் அருகே மனநலம் குன்றிய பெண் சுடுகாட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வீராணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  சேலம் வலசையூர் அருகேயுள்ள பூவனூரைச் சேர்ந்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:
சேலம், செப்.23: சேலம் மாவட்டம் வலசையூர் அருகே மனநலம் குன்றிய பெண் சுடுகாட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வீராணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 சேலம் வலசையூர் அருகேயுள்ள பூவனூரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு முத்துச்செல்வி (40) என்ற மகளும், முத்துக்கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். நல்லதம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள முத்துச்செல்வி சற்று மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகவில்லை.
 இவர் தினமும் வலசையூர் பகுதியில் சுற்றித் திரிவார் என்றும் அப்பகுதியினர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கோயில், பொதுமக்களின் வீட்டு வாசல்களில் படுத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அரூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள சுக்கம்பட்டி சுடுகாட்டில், தலையில் பலத்த காயத்துடன் முத்துச்செல்வி இறந்து கிடப்பதை அப்பகுதியினர் கண்டுள்ளனர்.
 இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வேலுமணி, வீராணம் போலீஸூக்கு தகவல் தெரிவித்தார். கூடுதல் எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 முத்துச்செல்வியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
 இது குறித்து அவரது தாயார் உமாதேவி கூறும்போது, முத்துச்செல்வி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நன்றாகத்தான் இருந்தார். எனது கணவர் நல்லதம்பி இறந்ததில் இருந்து அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போன்று நடந்து கொண்டார். இருப்பினும் தனது பணிகள் அனைத்தையும் அவரே செய்து கொள்வார். 
 மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை யாரோ ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டுச் சென்றுள்ளனர். குற்றவாளிகளை போலீஸார் உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முழு கட்டுரையைப் படிக்க →