முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் மோதல் : 20 பயணிகள் காயம்

பொள்ளாச்சி, செப்., 25 : பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில்  20 பயணிகள் காயமடைந்தனர். உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து திப்பம்பட்டி அர

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

பொள்ளாச்சி, செப்., 25 : பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில்  20 பயணிகள் காயமடைந்தனர்.

உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து திப்பம்பட்டி அருகே வந்த போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டது. இதனால் பின்னாடி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளில் இருந்த சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.