மருத்துவக்கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் திருட்டு
சிதம்பரம் முத்தையாநகரில் வசிக்கும் மருத்துவக்கல்லூரி மாணவரிடம் கத்திய காட்டி மிரட்டி மர்மஆசாமிகள் இருவர் ரூ.46 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை பறித்துச் சென்றனர்.
சிதம்பரம் முத்தையாநகரில் வசிக்கும் மருத்துவக்கல்லூரி மாணவரிடம் கத்திய காட்டி மிரட்டி மர்மஆசாமிகள் இருவர் ரூ.46 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை பறித்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா மகன் சையத்அகரம் (19). இவர் சிதம்பரம் முத்தையாநகர் மீனாட்சி அம்மன்தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்மஆசாமிகள் இருவர் கதவை தட்டி, உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த ரூ.10ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு, பேண்ட், சட்டைகள் மற்றும் டேபிள் பேன் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றனர். திருடு போன ரொக்கம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ.46 ஆயிரமாகும். இதுகுறித்து மாணவர் சையத்அகரம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.