முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் லாட்ஜில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை

சிதம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:07 AM
பகிர்:

சிதம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவில் தனியார் லாட்ஜில் சந்தேகப்படும்படியாக 5 பேர் தங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் லாட்ஜிற்கு சென்று சோதனை மேற்கொண்டு வீச்சரிவாள்கள், கத்தி, இரும்பு பைப் ஆகிய ஆயுதங்களுடன் தங்கியிருந்த 5 பேர் கூலிப்படையினர் என தெரியவந்து, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஜெரால்டு, சிவக்குமார், கார்த்திக், பாண்டியன், சிதம்பரத்தை அடுத்த உத்தமசோழமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகிய 5 பேர் என தெரியவந்துள்ளது. யாரையோ கொலை செய்ய திட்டமிட்டு லாடஜில் தங்கியிருந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.