சிதம்பரத்தில் அதிகாலையில் டாக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி 5 1/2 பவுன் நகை கொள்ளை!
சிதம்பரம் நகரில் சனிக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் சென்ற டாக்டர் மனைவியிடம் மர்ம ஆசாம
சிதம்பரம் நகரில் சனிக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் சென்ற டாக்டர் மனைவியிடம் மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 5 1/2 பவுன் மதிப்பிலான தாலிசரடு, செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
சிதம்பரம் பச்சையப்பன்தெருவில் வசிப்பவர் டாக்டர் சேதுராஜன். சேது ஸ்கேன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (48) சி.முட்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில் ஹேமலதா சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வீட்டு வாசலில் கோலம் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலிசரடு, டாலர் செயின் ஆகிய இரண்டையும் பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்