முகப்பு
தற்போதைய செய்திகள்

10ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் மார்ச் 27-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கின. இத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். தமிழ் 2-ம் தாள் தேர்வில் வினாத்தாளில் 38-வது வினாவிற்கு வங்கி படிவம் கல்வித்துறையினரால் வழங்கப்படவில்லை. படிவம் இல்லாமல் அந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:09 AM
பகிர்:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மார்ச் 27-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கின. இத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். தமிழ் 2-ம் தாள் தேர்வில் வினாத்தாளில் 38-வது வினாவிற்கு வங்கி படிவம் கல்வித்துறையினரால் வழங்கப்படவில்லை. படிவம் இல்லாமல் அந்த வினாவிற்கு விடை எழுத முடியாத காரணத்தால், அந்த வினாவின் எண்ணை எழுதினால் மதிப்பெண் உண்டு தேர்வு கண்காணிப்பாளர் கூறியதால் மாணவர்கள் எண்ணை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் சட்டப்பேரவையில் வினாவிற்கு விடை எழுத முயற்சித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி சங்க ஆலோசகர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தது: படிவம் இல்லாததால் பல மாணவர்கள் அவ்வினாவிற்கு விடை எழுதாமல் விட்டுள்ளனர். மாணவர்கள் வினாவை எழுத முயற்சி செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும் அந்த வினாவிற்குண்டாண 5 மதிப்பெண்களை அனைத்து மாணவர்களும் கூடுதலாக வழங்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பி.முட்லூர் மாணவர்களுடையே விடைத்தாள்கள் ரயில்வே அஞ்சல ஊழியர்களின் அலட்சியத்தால் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் மாணவர்களின் ஆங்கிலம் 2-ம் தாள் விடைத்தாள்கள் மாயமடைந்தன. இவ்விரு மையங்களின் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது வீண் சிரமங்களை ஏற்படுத்தும்.  எனவே அதை தவிர்பதற்கு இந்த மாணவர்களுக்கு மட்டும் 2-ம் தாள் மதிப்பெண்களை விட தமிழ் முதல்தாளில் கூடுதலாக 10 மதிப்பெண்களும், ஆங்கிலம் 2-ம் தாளில் முதல் தாள் மதிப்பெண்களை விட கூடுதலாக 10 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கும் மதிப்பெண்கள் 90-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். இந்த கருத்துகளை மாணவர்கள் நலன் கருதி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பரிசீலனை செய்து மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி சங்க ஆலோசரும், முன்னாள் எம்எல்சியுமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.