முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைநகர் மெக்கானிக் கொலை வழக்கு: மனைவி உள்பட 4 பேர் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மெக்கானிக் சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 4 பேரை அண்ணாமலைநகர் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மெக்கானிக் சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 4 பேரை அண்ணாமலைநகர் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள இருசக்கர வாகன ஒர்க்ஷôப்பில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மெக்கானிக் சந்திரசேகரன் (39), வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்குத் தொடர்பாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 3-ம் தேதி மாமனார் ராகவன் (65), மைத்துனர் ஆரோக்கியராஜ் (29) ஆகிய இருவரும் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் அண்ணாமலைநகர் போலீஸôர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரன் தனியாக வசித்து வந்ததாகவும், பல்கலைக்கழக மருத்துவமனையில் நர்ஸôக வேலைப் பார்க்கும் மனைவி மீனாட்சியை சமீபத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்து சந்திரசேகர் அரிவாளால் வெட்டி தாக்கியதாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி ஒர்க்ஷôப்பில் சந்திரசேகரன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது மனைவி மீனாட்சி (33), மாமனார் ராகவன், மாமியார் சாந்தா (58), மைத்துனர் ஆரோக்கியராஜ் மற்றும் ரஞ்சித், மோகன் ஆகியோர் சேர்ந்து வீச்சரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக தெரியவந்தது.

அதன் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிந்து மீனாட்சி, ராகவன், ஆரோக்கியராஜ், சாந்தா ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வீச்சரிவாள், கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ரஞ்சித், மோகன் ஆகிய இருவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.