முகப்பு
தற்போதைய செய்திகள்

பல்கலை. நிர்வாகிக்கு முழு ஒத்துழைப்பு: ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு முடிவு

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐ.ஏ.எஸ். எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து சிறப்பாக பணியாற்றுவது என பல்கலைக்கழக ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐ.ஏ.எஸ். எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து சிறப்பாக பணியாற்றுவது என பல்கலைக்கழக ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு அவசர பொதுக்குழுக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோயில் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரா.உதயசந்திரன் தலைமை வகித்தார். ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன், பொதுச்செயலர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரை நியமிக்க தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் ஆசிரியர் - ஊழியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ÷மாணவர் சேர்க்கையில் ஒற்றை சாளரமுறை, நுழைவுத் தேர்வு ரத்து ஆகியவற்றை செயல்படுத்த பல்கலை நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவை கோருவது, பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு அளிப்பது, பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவது, அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டுறவு நாணய சங்கத் தேர்தலில் ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.