சிவகங்கையில் கோடைகால ஓவியப் பயிற்சி முகாம்
சிவகங்கை ஓவிய ஆசிரியர்கள் சார்பில், கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோடைகால ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை ஓவிய ஆசிரியர்கள் சார்பில், கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோடைகால ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
எழுத்துப் பயிற்சி, வண்ணம் தீட்டுதல், பென்சில் ஓவியம், உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு ஓவியம் உருவாக்குதல், நீர் ஓவியம், களிமண்ணால் உருவம் செய்தல், புதிய படைப்புகள், ஓவியப் போட்டிகளுக்கு தயார் செய்தல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படும். மழலையர் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.50. இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 94435 75850 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி ஓவிய ஆசிரியர் போ.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.