முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது: அஸ்ரா கர்க் தகவல்

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு மாவட்டம் முழுவதும் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:18 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு மாவட்டம் முழுவதும் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நவ.7ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில்  விதிக்கப்பட்ட இந்தத் தடையுத்தரவால், எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. அரசியல், சமூக நிகழ்ச்சிகளும், கூட்டங்களும் நடத்தப்படவில்லை. மேலும், கோவில் திருவிழாக்கள்கூட நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அமைதி திரும்பியதை அடுத்து, கடந்த மாதம் சில கிராமங்களில் மட்டும் இந்தத் தடை  விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.